Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை உள்ளடக்கிய 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரால் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலம் நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், குறித்த சட்டமூலம் அரசியலமைப்புடன் முரண்படுவதாகத் தீர்மானிக்கப்படும் பட்சத்தில், அதனை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆக அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆக உயர்த்தவும் சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை தற்போதுள்ள 19 இலிருந்து 24 ஆக அதிகரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரதம நீதியரசரின் பதவிக்காலம் தொடர்பிலும் புதிய ஏற்பாடு முன்மொழியப்பட்டுள்ளது. அதன்படி, பிரதம நீதியரசர் 67 வயதை அடையும் போது அல்லது பதவியேற்று ஆறு ஆண்டுகள் நிறைவடையும் போது, இவற்றில் எது முதலில் இடம்பெறுகிறதோ அந்த சந்தர்ப்பத்தில் பதவியிலிருந்து ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த மாற்றங்கள் நீதித்துறையின் சுயாதீனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சட்டத்தரணிகள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கவலை வெளியிட்டுள்ள நிலையில், அரசாங்கம் இந்தத் திருத்தம் தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டது என தெரிவித்துள்ளது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த ஆகஸ்ட் 7ஆம் திகதி அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

October 4, 2026
இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது

October 4, 2026
கல்முனையில் புதிய தீவிரவாதத் தலைமை?; சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை
செய்திகள்

கல்முனையில் புதிய தீவிரவாதத் தலைமை?; சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை

October 4, 2026
20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்
செய்திகள்

20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்

October 4, 2026
யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்
செய்திகள்

யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்

October 4, 2026
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்
செய்திகள்

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்

October 4, 2026
Next Post
பஸில் ராஜபக்ஷவின் பிணைத்தொகையை பறிமுதல் செய்ய மாத்தறை நீதிமன்றம் உத்தரவு!

பஸில் ராஜபக்ஷவின் பிணைத்தொகையை பறிமுதல் செய்ய மாத்தறை நீதிமன்றம் உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு