Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை!

வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை!

2 months ago
in செய்திகள்

சிறுநீரக நோயாளிகளுக்கான குருதி சுத்திகரிப்பு சிகிச்சை வசதிகளை வடக்கு மாகாணத்தில் மேலும் விரிவுபடுத்தும் வகையில், 83,544 கனேடிய டொலர் பெறுமதியான ஆறு டயாலிசிஸ் இயந்திரங்கள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

செந்தில்குமரன் நிவாரண நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து வழங்கிய இந்த இயந்திரங்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைகளுக்கும், மல்லாவி ஆதார மருத்துவமனைக்கும் வழங்கப்படவுள்ளன.

இதற்கான வரித் தீர்வாக வடக்கு மாகாண சபையினால் 3.5 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நேற்று (20) நடைபெற்ற நிகழ்வில், கனடா உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் இந்த இயந்திரங்கள் கையளிக்கப்பட்டன.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகன், சிறுநீரக நோயாளிகள் சிகிச்சைக்காக வாரத்தில் பல தடவைகள் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்படுவதுடன், தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதனால், டயாலிசிஸ் சிகிச்சை வசதிகளை நோயாளிகளின் வாழ்விடங்களுக்கு அருகில் கொண்டு செல்வது அவர்களின் பயணச் சுமையையும் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையையும் குறைக்க உதவும் என அவர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில், குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சிறுநீரக நோய் தொடர்பான ஆய்வுகள் மற்றும் சுகாதாரத் தரவுகளின் அடிப்படையிலான நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.

குடிநீரின் தரம், நீண்டகால நீர் பயன்பாடு, விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட பல காரணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சிறுநீரக நோய்க்கு ஒரே ஒரு காரணியை மாத்திரம் பொறுப்பாக்குவது அறிவியல் ரீதியாக பொருத்தமானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, சிகிச்சை வழங்குவதுடன் மட்டுப்படாமல், சிறுநீரக நோய் அதிகரிப்பதற்கான காரணிகளை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் தேவைகளுக்கு தொடர்ச்சியாக பங்களித்து வரும் செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் சேவையையும் ஆளுநர் பாராட்டினார்.

ஆறு டயாலிசிஸ் இயந்திரங்கள் வழங்கப்படுவது மருத்துவ உபகரணங்களை வழங்கும் நடவடிக்கை மட்டுமல்ல; சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை வாய்ப்பையும், அவர்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் வழங்கும் மனிதநேயப் பங்களிப்பாகும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!

October 5, 2026
ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!
செய்திகள்

ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!

October 5, 2026
மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு
செய்திகள்

மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு

October 5, 2026
கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!
செய்திகள்

கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!

October 5, 2026
மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு
செய்திகள்

“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு

October 5, 2026
Next Post
நந்தா மாலினி மறைவு; 3 நாட்கள் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்!

நந்தா மாலினி மறைவு; 3 நாட்கள் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.