நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, “இதுவே எனது கடைசி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தம்மிடம் ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமக்கு மிகவும் பிடித்தவர் யார் எனக் கேட்டபோது, வேறு எந்தப் பெயரும் நினைவுக்கு வராத நிலையில் “நளிந்த அண்ணா” எனப் பதிலளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்த அவர், இனிமேல் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை “நளிந்த அண்ணா” என அழைக்க முடியாது என்றும், “நளிந்த சார்” என்றே அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தாம் மிகுந்த மகிழ்ச்சியுடனேயே குறித்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைத்ததாகக் குறிப்பிட்ட அர்ச்சுனா, தற்போதைய உரை தனது கடைசி நாடாளுமன்ற உரையாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.








