கொழும்பு – கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யோர்க் வீதியில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார்.
நேற்று (20) இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புறக்கோட்டை நோக்கிப் பயணித்த பேருந்தே அவரை மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த வெளிநாட்டவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








