அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளை நிறைவு செய்து வெளியேற முடியும் என 10 வைத்தியர்கள் அடங்கிய குழாம் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சுரேஷ் சலே இன்று (06) மாலை மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் எடுக்கப்படுவார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுரேஷ் சலே தொடர்பான வழக்கின் விசாரணை முன்னேற்றம் குறித்து அறிக்கையை எதிர்வரும் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








