Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீதிபதிகள் நுழையும் வழியாக அனுமதிக்கப்பட்ட சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டு தேரர்; எழுந்துள்ள சர்ச்சை

நீதிபதிகள் நுழையும் வழியாக அனுமதிக்கப்பட்ட சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டு தேரர்; எழுந்துள்ள சர்ச்சை

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில், கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரோ, சொகுசு கார் மூலம் நீதிபதிகள் மட்டுமே பயன்படுத்தும் விசேட வாயிலூடாக நீதிமன்றத்திற்குள் அழைத்து வரப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சனக அபேவிக்கிரம, “பொதுமக்கள் கடுமையான சோதனைக்குள்ளாக்கப்படும் பிரதான நுழைவாயிலைத் தவிர்த்து, ஒரு சந்தேக நபர் எவ்வாறு விசேட வாயிலால் அனுமதிக்கப்படலாம்?” என நீதிமன்றத்தில் பலத்த கேள்விகளை எழுப்பினார்.

இந்த விதிமீறல் தொடர்பாக விசாரணை நடத்திய அனுராதபுரம் தலைமை நீதவான், நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்புப் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் ஜி. தர்மசிறியை உடனடியாக நீதிமன்றக் கூண்டில் ஏறுமாறு உத்தரவிட்டார்.

விசேட பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியான தர்மசிறியிடம், ஒரு சந்தேக நபருக்கு இத்தகைய சிறப்புச் சலுகை மற்றும் சொகுசு வசதி நீதிமன்ற வளாகத்திற்குள் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து நீதவான் கடுமையான விசாரணை மேற்கொண்டுள்ளார்.

கடந்த மே மாதம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரின் தலையீட்டால், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பல்லேகம ஹேமரத்ன தேரோ கைது செய்யப்பட்டார்.

பின்னர் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டதோடு, வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த பேருந்து சாரதி தற்காலிகமாக பணியிடைநீக்கம்!
செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த பேருந்து சாரதி தற்காலிகமாக பணியிடைநீக்கம்!

October 7, 2026
திருமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகருக்கு விளக்கமறியல்!
செய்திகள்

திருமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகருக்கு விளக்கமறியல்!

October 7, 2026
ஞானசார தேரரின் வழக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

ஞானசார தேரரின் வழக்கு ஒத்திவைப்பு!

October 7, 2026
ஞானசார தேரருக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல்!
செய்திகள்

ஞானசார தேரருக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல்!

October 7, 2026
சபரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்; 11 மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்!
செய்திகள்

சபரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்; 11 மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்!

October 7, 2026
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 570 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 570 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

October 7, 2026
Next Post
பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிக்கும்போது வீட்டிலிருந்தே உணவும் குடிநீரும் எடுத்து செல்லுங்கள்; அதுவே அவர்களுக்கு தண்டனை!

பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிக்கும்போது வீட்டிலிருந்தே உணவும் குடிநீரும் எடுத்து செல்லுங்கள்; அதுவே அவர்களுக்கு தண்டனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு