ஹங்வெல்ல, ஆர்ட்டிகல பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற சட்டவிரோத மதுபான வியாபாரத்தை முற்றுகையிடச் சென்ற ஹங்வெல்ல பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனையின் போது அங்கிருந்த இருவர் பொலிஸாரைக் கத்தியால் வெட்டித் தாக்கியதுடன், அங்கிருந்த பெண்ணொருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் கடித்துக் காயப்படுத்தியுள்ளார். இத்தாக்குதலில் காயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்த சந்தேகநபர்களில் ஒருவரும் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







