நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீட்டு நட்டஈடு வழங்க அரசாங்கம் ரூ.3,000 மில்லியனை ஒதுக்கியுள்ளது.
மொனராகலை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 7,000க்கும் மேற்பட்ட விவசாயிகளின் சுமார் 8,000 ஏக்கர் பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நெல், சோளம் உள்ளிட்ட 6 பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.100,000 வீதம், விவசாயி ஒருவருக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகள் உடனடியாக விவசாய அபிவிருத்தி நிலையங்களில் அதனைப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








