Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நேபாளத்தை உலுக்கிய திடீர் வெள்ளம்; காரணம் குறித்து புதிய தகவல்!

நேபாளத்தை உலுக்கிய திடீர் வெள்ளம்; காரணம் குறித்து புதிய தகவல்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நேபாளத்தில் பெரும் உயிரிழப்புகளையும் அழிவையும் ஏற்படுத்திய திடீர் வெள்ளத்திற்கான காரணம் தொடர்பில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

ஆரம்பத்தில், நேபாள–சீன எல்லைப் பகுதியில் பனியாறு ஒன்று நிலநடுக்கத்தால் சரிந்து, திபெத்தில் உள்ள லெண்டேகோலா ஆற்றில் விழுந்ததன் காரணமாகவே திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், மேற்கொள்ளப்பட்ட மேலதிக ஆய்வுகளின் அடிப்படையில், நிலநடுக்கம் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பனியாறு சரிந்ததன் விளைவாக ஏற்பட்ட பாரிய நிலச்சரிவே ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயர்வதற்கு காரணமாகி, பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள–சீன திபெத் எல்லைப் பகுதிகளில் நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம் பல பகுதிகளில் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 170-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெள்ளப்பெருக்குடன் அதிகளவிலான மண் மற்றும் பாறைகளும் அடித்துச் செல்லப்பட்டதால், பல கிராமங்கள் சேற்றில் மூழ்கியுள்ளன. வீடுகள், வீதிகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட பல கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.

சிட்வான் மாவட்டம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், நுவாகோட், தாடிங், கோர்கா, தனாஹுன் மற்றும் நவல்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க சேதங்கள் பதிவாகியுள்ளன.

இதனிடையே, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளும், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு
செய்திகள்

நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு

October 11, 2026
ஜிபூட்டி கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்து – 15 சிறுவர்கள் உட்பட 109 பேர் பலி; 116 பேர் மாயம்!
செய்திகள்

ஜிபூட்டி கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்து – 15 சிறுவர்கள் உட்பட 109 பேர் பலி; 116 பேர் மாயம்!

October 11, 2026
AI மூலம் போலி பணப் பரிமாற்ற ரசீதுகள் தயாரித்து மோசடி!; விற்பனையாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

AI மூலம் போலி பணப் பரிமாற்ற ரசீதுகள் தயாரித்து மோசடி!; விற்பனையாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

October 11, 2026
சிறையிலிருந்தபடி ஜனைதிபதிக்கு நாமல் கடிதம்
செய்திகள்

சிறையிலிருந்தபடி ஜனைதிபதிக்கு நாமல் கடிதம்

October 11, 2026
ஞானசார தேரர் விவகாரத்தில் ஜனாதிபதி தவறைச் சீர்செய்ய வேண்டும்: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரத்தில் ஜனாதிபதி தவறைச் சீர்செய்ய வேண்டும்: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!

October 11, 2026
குறுகிய தூர SLTB பேருந்துப் பயணங்களில் தேநீர் இடைநிறுத்தங்களைக் குறைக்கத் திட்டம்!
செய்திகள்

குறுகிய தூர SLTB பேருந்துப் பயணங்களில் தேநீர் இடைநிறுத்தங்களைக் குறைக்கத் திட்டம்!

October 11, 2026
Next Post
நாளை முதல் இலங்கைக்கு நேரே உச்சிகொடுக்கவுள்ள சூரியன்; வானிலை அவதானநிலைய மையம் அறிவிப்பு!

நாளை முதல் இலங்கைக்கு நேரே உச்சிகொடுக்கவுள்ள சூரியன்; வானிலை அவதானநிலைய மையம் அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு