Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குடிநீரை நிர்ணய விலையை விட அதிகமாக விற்ற உணவகம்; ரூ.9.5 இலட்சம் அபராதம்!

குடிநீரை நிர்ணய விலையை விட அதிகமாக விற்ற உணவகம்; ரூ.9.5 இலட்சம் அபராதம்!

36 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்திலுள்ள உணவகம் ஒன்றுக்கு 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்ட விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, குறித்த உணவகத்தில் ஒரு லீற்றர் குடிநீர் போத்தல் ஒன்று நிர்ணயிக்கப்பட்ட 120 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக, 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 950,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விலையை சரிபார்க்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கொள்வனவுக்கான முறையான பற்றுச்சீட்டைப் பெற்று அதனை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது உள்ளிட்ட நுகர்வோர் சட்ட மீறல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால், அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக அதிகாரசபைக்கு அறிவிக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கெப்பித்திகொல்லாவ பகுதியில் கோர விபத்து; கைக்குழந்தை உட்பட மூவர் பலி!
செய்திகள்

கெப்பித்திகொல்லாவ பகுதியில் கோர விபத்து; கைக்குழந்தை உட்பட மூவர் பலி!

August 27, 2026
கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!
செய்திகள்

கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

August 27, 2026
நேபாள வெள்ள அனர்த்தம்; உதவிக்கரம் நீட்டத் தயார் இலங்கை – விஜித்த ஹேரத்
செய்திகள்

நேபாள வெள்ள அனர்த்தம்; உதவிக்கரம் நீட்டத் தயார் இலங்கை – விஜித்த ஹேரத்

August 27, 2026
“Surprise and Shine” – புதிய ஐபோன் அறிமுகத்துக்கு தயாராகும் ஆப்பிள்!
செய்திகள்

“Surprise and Shine” – புதிய ஐபோன் அறிமுகத்துக்கு தயாராகும் ஆப்பிள்!

August 27, 2026
நேபாள வெள்ள அனர்த்தம்; இலங்கையின் முழுமையான ஆதரவை உறுதியளித்த ஜனாதிபதி அநுர!
செய்திகள்

நேபாள வெள்ள அனர்த்தம்; இலங்கையின் முழுமையான ஆதரவை உறுதியளித்த ஜனாதிபதி அநுர!

August 27, 2026
போதைப்பொருளாக பயன்படுத்தப்பட்ட மருந்துகள்; மருதானையில் அதிர்ச்சி சம்பவம்!
செய்திகள்

போதைப்பொருளாக பயன்படுத்தப்பட்ட மருந்துகள்; மருதானையில் அதிர்ச்சி சம்பவம்!

August 27, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு