Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாளை முதல் இலங்கைக்கு நேரே உச்சிகொடுக்கவுள்ள சூரியன்; வானிலை அவதானநிலைய மையம் அறிவிப்பு!

நாளை முதல் இலங்கைக்கு நேரே உச்சிகொடுக்கவுள்ள சூரியன்; வானிலை அவதானநிலைய மையம் அறிவிப்பு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சூரியன் தெற்கு நோக்கி நகர்ந்து வருவதன் காரணமாக, நாளை (28) முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைப் பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் காணப்படும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை பிற்பகல் 12.11 மணியளவில் சூரியன் இலங்கையின் குறிப்பிட்ட பகுதிகளில் நேர் உச்சியை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை மேல் மாகாணம், சபரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வுத் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணன் தாக்கல் செய்த வழக்கில் அர்ச்சுனா உட்பட 3 பேருக்கு மட்டு நீதிமன்றின் உத்தரவு
காணொளிகள்

வைத்தியர் சுகுணன் தாக்கல் செய்த வழக்கில் அர்ச்சுனா உட்பட 3 பேருக்கு மட்டு நீதிமன்றின் உத்தரவு

October 12, 2026
சதொச நிறுவனத்திற்கு 2,200 கோடி ரூபாய் நஷ்டம்
செய்திகள்

சதொச நிறுவனத்திற்கு 2,200 கோடி ரூபாய் நஷ்டம்

October 12, 2026
பெளத்த பீடங்களின் பரிந்துரையின் பேரில் பிக்குகளை சிறையிலிருந்து காவி உடையுடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை
செய்திகள்

பெளத்த பீடங்களின் பரிந்துரையின் பேரில் பிக்குகளை சிறையிலிருந்து காவி உடையுடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை

October 12, 2026
2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரொபர்ட் ஈ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு அறிவிப்பு!
செய்திகள்

2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரொபர்ட் ஈ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு அறிவிப்பு!

October 12, 2026
அர்ச்சுனாவின் வழக்கிலிருந்து விலகும் சட்டத்தரணி
செய்திகள்

அர்ச்சுனாவின் வழக்கிலிருந்து விலகும் சட்டத்தரணி

October 12, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

October 12, 2026
Next Post
பொது ஒழுங்கைப் பேண முப்படையினரை அழைக்க ஜனாதிபதி உத்தரவு!

பொது ஒழுங்கைப் பேண முப்படையினரை அழைக்க ஜனாதிபதி உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு