ஓகஸ்ட் 20ஆம் திகதி பொலிஸ் சான்றிதழுக்கு இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அன்று தரவுத் தொகுதி செயலிழந்ததால், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அமைப்பிலிருந்து நீங்கியுள்ளன.
முந்தைய விண்ணப்பத்திற்காக செலுத்திய 5,100 ரூபாய் கட்டணம், அதே அட்டைக்கு மீளளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவுத் தொகுதி தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதால், வழமை போன்று இணையவழியில் விண்ணப்பிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.








