Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மாவடி வேம்பு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு; பொது காணிகளுக்கு அனுமதி!

மட்டு மாவடி வேம்பு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு; பொது காணிகளுக்கு அனுமதி!

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடி வேம்பு கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளுக்கான விடுவித்தல் அனுமதிப் பத்திரங்களின் பிரதிகள் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மாவடி வேம்பு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் நேற்று (27) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பொது மயானம், சிறுவர் பூங்கா, கலாச்சார மண்டபம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க வளாகம் ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த அதிகாரசபையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மாவடி வேம்பு கிராமத்தில் பொது மயானம் இல்லாத காரணத்தால், அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக அருகிலுள்ள கிராமங்களின் மயானங்களைப் பயன்படுத்தி வந்தனர். இதனால் பல்வேறு நடைமுறை சிரமங்களை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை, பொதுமக்கள் நிகழ்வுகளை நடத்துவதற்கான கலாச்சார மண்டபம், சிறுவர் பூங்கா மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க வளாகம் ஆகியவற்றுக்கான காணி ஆவணங்கள் முறையாக இல்லாத நிலையும் நீண்டகால பிரச்சினையாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், பிரதேச உறுப்பினரின் கோரிக்கையைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் காணி சீர்திருத்த அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளருடன் கலந்துரையாடி, குறித்த காணிகளுக்கான விடுவித்தல் ஆவணங்களைப் பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அந்த ஆவணங்களின் பிரதிகள் மக்கள் சந்திப்பின்போது பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.

மேலும், குறித்த காணிகளை துப்புரவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபையின் அனுமதிகள் பெறப்பட வேண்டியுள்ளதாக சாணக்கியன் குறிப்பிட்டார்.

இதற்கான நடவடிக்கைகளை பிரதேச சபை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இசைப் பாடல்களுக்கான காப்புரிமைக் கட்டண நடைமுறைகள் தற்காலிக இடைநிறுத்தம்!
செய்திகள்

இசைப் பாடல்களுக்கான காப்புரிமைக் கட்டண நடைமுறைகள் தற்காலிக இடைநிறுத்தம்!

October 13, 2026
2027இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக சரியும்; IMF கணிப்பு
செய்திகள்

2027இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக சரியும்; IMF கணிப்பு

October 13, 2026
15 இலட்சம் மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் பாடசாலை உபகரணக் கொடுப்பனவு!
செய்திகள்

15 இலட்சம் மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் பாடசாலை உபகரணக் கொடுப்பனவு!

October 13, 2026
பெற்றோரின் உடல் நிலையை காரணம்காட்டி பிணை கோரிய நாமல்
செய்திகள்

பெற்றோரின் உடல் நிலையை காரணம்காட்டி பிணை கோரிய நாமல்

October 13, 2026
“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!
உலக செய்திகள்

“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!

October 13, 2026
ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!
செய்திகள்

ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

October 13, 2026
Next Post
வெனிசுலாவின் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்பை இலக்கு வைக்கும் அமெரிக்கா; டிரம்ப் தகவல்

வெனிசுலாவின் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்பை இலக்கு வைக்கும் அமெரிக்கா; டிரம்ப் தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு