Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் நீர் விநியோகம் 4 மணி நேரம் இடைநிறுத்தம்; வறட்சியால் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் வீழ்ச்சி!

மட்டக்களப்பில் நீர் விநியோகம் 4 மணி நேரம் இடைநிறுத்தம்; வறட்சியால் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் வீழ்ச்சி!

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால், அப்பகுதியில் தினசரி நான்கு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, தினமும் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சபையின் தலைவர் ஏ.எம்.பி.சி.டி. பண்டார தெரிவித்துள்ளார்.

எனினும், நாடு முழுவதும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கீழ் இயங்கும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழமைபோன்று செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் அதிகபட்ச கொள்ளளவில் நீர் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 28 இலட்சம் கனமீற்றர் நீர் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதில் 23 முதல் 24 சதவீதம் பாரிய நீர்த்தேக்கங்களிலிருந்தும், சுமார் 65 சதவீதம் ஆறுகள் மற்றும் ஓடைகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களிலிருந்தும் பெறப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் நாளொன்றுக்கு சுமார் 6 இலட்சம் கனமீற்றர் நீர் களனி கங்கையிலிருந்து பெறப்படுவதாகவும், நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் நீரில் சுமார் மூன்றில் ஒரு பங்கு களனி கங்கையிலிருந்து பெறப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வறட்சியான காலநிலையால் மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களே தற்போது ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மொனராகலை மாவட்டத்தின் பிபிலை மற்றும் மெதகம பகுதிகளிலும் நீர் ஆதாரங்களில் ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு, நீர் விநியோகத்தை கட்டுப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வலி வடக்கு பிரதேச சபையில் மதுபான சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்
செய்திகள்

வலி வடக்கு பிரதேச சபையில் மதுபான சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

October 15, 2026
மக்கள் வங்கி கடன் வசதி குறித்த குற்றச்சாட்டுகளை LOLC நிறுவனம் நிராகரித்தது; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை
செய்திகள்

மக்கள் வங்கி கடன் வசதி குறித்த குற்றச்சாட்டுகளை LOLC நிறுவனம் நிராகரித்தது; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை

October 15, 2026
மைலத்தமடுவில் மீண்டும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

மைலத்தமடுவில் மீண்டும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு!

October 15, 2026
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்

October 15, 2026
இறைச்சிக்காக மாட்டின் இரண்டு பின்னங்கால்களையும் வெட்டி கடத்த முயற்சி
செய்திகள்

இறைச்சிக்காக மாட்டின் இரண்டு பின்னங்கால்களையும் வெட்டி கடத்த முயற்சி

October 15, 2026
கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!
செய்திகள்

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!

October 15, 2026
Next Post
ஐஓசி, சினோபெக் பெற்றோல் விலைகளும் குறைப்பு!

ஐஓசி, சினோபெக் பெற்றோல் விலைகளும் குறைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு