Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தின் உதவியுடன் பழுகாமம் பாலம் புனரமைப்பு பணி ஆரம்பம்!

மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தின் உதவியுடன் பழுகாமம் பாலம் புனரமைப்பு பணி ஆரம்பம்!

13 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த மூன்று பாலங்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ், பழுகாமம் – பெரியபோரதீவு பகுதிகளை இணைக்கும் ஆத்துக்கட்டு பாலத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் முதற்கட்டமாக பழுகாமம் பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக 45 பேர் கொண்ட இந்திய இராணுவ தொழில்நுட்பப் பிரிவினர் இலங்கை இராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவினருடனும், இலங்கை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினருடனும் இணைந்து பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் மகிழவெட்டுவான், பழுகாமம் மற்றும் மாவடிஓடை ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த பாலங்கள் சேதமடைந்து, பொதுமக்களின் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.

இதனையடுத்து, குறித்த மூன்று பாலங்களையும் புனரமைத்துத் தருமாறு இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. அந்தக் கோரிக்கைக்கு அமைவாகவே தற்போது புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக பழுகாமம் – பெரியபோரதீவு பகுதிகளை இணைக்கும் ஆத்துக்கட்டு பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய இரு பாலங்களுக்கான கட்டுமானப் பொருட்கள் கிடைக்கப்பெற்றதும் அவற்றின் புனரமைப்பு பணிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் பொறியியலாளர் வேதநாயகம் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பாலங்கள் புனரமைக்கப்பட்டதன் பின்னர், வெள்ளக்காலங்களில் துண்டிக்கப்படும் போக்குவரத்து தொடர்புகள் மீண்டும் சீரடைவதுடன், அப்பகுதி மக்களின் அன்றாட போக்குவரத்துக்கும் பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!
செய்திகள்

பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!

August 31, 2026
செங்கலடி பிரதேச செயலகம் முன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!
செய்திகள்

செங்கலடி பிரதேச செயலகம் முன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

August 31, 2026
தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்; ரவூப் ஹக்கீம்!
அரசியல்

தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்; ரவூப் ஹக்கீம்!

August 31, 2026
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு!

August 31, 2026
மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு; மட்டக்களப்பில் புனர்வாழ்வு நிலையம் தேவை
செய்திகள்

மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு; மட்டக்களப்பில் புனர்வாழ்வு நிலையம் தேவை

August 31, 2026
சாய்ந்தமருதில் ‘நாயிறைச்சி விற்பனை’ என பரவும் தகவல் பொய்; சுகாதார அதிகாரிகள் விளக்கம்!
செய்திகள்

சாய்ந்தமருதில் ‘நாயிறைச்சி விற்பனை’ என பரவும் தகவல் பொய்; சுகாதார அதிகாரிகள் விளக்கம்!

August 31, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு