புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் எட்டு மாத கர்ப்பிணியான இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் தனது கணவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணுடன், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கமான 119க்கு கிடைத்த தகவலையடுத்து, கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பவம் இடம்பெற்று சுமார் 45 நிமிடங்களுக்குள் சந்தேகநபரான கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் களாப்பள்ளி, தலவில பகுதியைச் சேர்ந்த திலினி தில்ருக்ஷி என்ற 26 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







