பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) சற்றுமுன்னர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷ இன்று (04) முற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில், அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, இன்று முற்பகல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்ஷவுக்கு எழுத்துமூலம் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில், விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதற்கான சரியான காரணம் மற்றும் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.








