கிழக்கு மாகாணத்தின் பாரம்பரிய கலை, கலாசாரம் மற்றும் உணவுப் பண்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் “கிழக்கின் நாதம் – கிழக்கு மாகாண கலாசார மற்றும் பாரம்பரிய உணவு விழா – 2026” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன், கிழக்கு மாகாண கலாசார மத்திய நிலையங்கள் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.
எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல், அக்கரைப்பற்று நீர்ப்பூங்காவில் இவ்விழா நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் பாரம்பரிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பாரம்பரிய உணவுகளை அறிந்துகொள்ளவும் சுவைத்துப் பார்க்கவும் வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு சமூகங்களின் பாரம்பரிய கலை நிகழ்வுகள், கலாசார நிகழ்வுகள் மற்றும் கலைசார் நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் தனித்துவமான கலை, கலாசாரம், பாரம்பரிய உணவு மற்றும் சமூகங்களின் பண்பாட்டு மரபுகளை ஒரே இடத்தில் வெளிப்படுத்தும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.








