சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் மருதானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், தொலைத்தொடர்பு பணப் பரிமாற்றம் (Telegraphic Transfer – T/T) முறையைப் பயன்படுத்தி சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








