பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 87 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாப் பிரபலமான பலவான் மாகாணத்தின் கொரான் பகுதிக்கு அருகிலுள்ள கடற்பரப்பில், கரையிலிருந்து சுமார் 2.2 கிலோமீட்டர் தொலைவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை, எம்.வி. ஜூன் அஸ்டர் (MV June Aster) கப்பலில் மொத்தம் 134 பேர் பயணம் செய்ததாகத் தெரிவித்துள்ளது.
இதுவரை 42 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.








