நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டிருந்த குறித்த பொதுமன்னிப்பின் சட்டபூர்வத்தன்மை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதன்படி, ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டரீதியாக செல்லாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.







