ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணச்சலவை விசாரணையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிடுவதற்கான நடவடிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான கொள்வனவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் பணச்சலவை குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விசாரணையின் அடுத்தகட்டமாக, நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிடுவதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








