கோறளைப்பற்று வடக்கு – வாகரை பிரதேச சபையில் “புத்துயிர்க்கும் புதுநகரம்” என்ற தொனிப்பொருளில் இவ்வருடத்திற்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிரதேச சபை தவிசாளர் க. தெய்வேந்திரனின் ஆலோசனையின் பேரில் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, பொதுப் பயன்பாட்டு தினமான நேற்று (15.09.2026) பொது இடங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், குடிநீர் வழங்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றன.
மாங்கேணி, கிருமிச்சை மற்றும் கேணிநகர் ஆகிய பகுதிகளில் இன்று மக்கள் சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது கோறளைப்பற்று வடக்கு – வாகரை பிரதேச சபை செயலாளர் சி. புவதாசன் கலந்து கொண்டு, பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வுகளை வழங்கினார்.













