Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 475 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் வாகனங்களை 14 நாட்களுக்கு முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

பதவிய – பராக்கிரமபுர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைத்த முறைப்பாடு, பொலிஸ் மா அதிபரால் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த நபர் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி காணிகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்களை கொள்வனவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முடக்கப்பட்டுள்ள சொத்துக்களில், அவரது மனைவியின் பெயரில் புதிய நகர், பதவிய பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 275 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பேர்ச்சஸ் காணியும், அதில் அமைக்கப்பட்டுள்ள இருமாடிக் கட்டிடமும் அடங்குகின்றன.

அத்துடன், அனுராதபுரம் விஜயபுர பகுதியில் சுமார் 120 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பேர்ச்சஸ் காணி மற்றும் அதில் அமைந்துள்ள வீடு, சுமார் 65 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேன் மற்றும் சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிறிய லொறி ஆகியவையும் விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் 47 வயதுடைய நபரும் அவரது 45 வயதுடைய மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2026 செப்டம்பர் 22ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு குறித்த சொத்துக்கள் மற்றும் வாகனங்களை முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?
செய்திகள்

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?

September 23, 2026
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனை!

September 23, 2026
வெளிநாட்டு கணக்குகளுக்கு ரூ.24.8 பில்லியன்   பணப் பரிமாற்றம்; ஒருவர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு கணக்குகளுக்கு ரூ.24.8 பில்லியன்  பணப் பரிமாற்றம்; ஒருவர் கைது!

September 23, 2026
வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
Next Post
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு