Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை தொழிற்கல்வித் துறை மேம்பாட்டுக்கு UAE ஒத்துழைப்பு; பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துரையாடல்

இலங்கை தொழிற்கல்வித் துறை மேம்பாட்டுக்கு UAE ஒத்துழைப்பு; பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துரையாடல்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சித் (TVET) துறையை வலுப்படுத்துவதற்கான எதிர்கால ஒத்துழைப்புகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (24) நடைபெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் வளர்ந்துவரும் கைத்தொழில்களுக்குத் தேவையான திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும். தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் இதன்போது விளக்கமளித்த பிரதமர், தொழிற்கல்விக்கான முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இளைஞர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் சந்தைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய வகையில், நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்பத் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியை நவீனமயப்படுத்துவதற்கும், முதலீடு செய்வதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.

அரசாங்கம் முன்னெடுத்துவரும் இந்த வேலைத்திட்டத்தைப் பாராட்டிய ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதிநிதிகள் குழு, இலங்கையின் தொழிற்கல்வித் துறையின் அபிவிருத்திக்காக முதலீடு செய்வதற்கும் ஆதரவளிப்பதற்கும் தமது விருப்பத்தைத் தெரிவித்தனர். இதன்போது, இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாயத் துறைகளில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் பிரதமர் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான திறன் விருத்தி, பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கான தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், அத்துடன் எதிர்கால முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்புகளை உருவாக்குதல் தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணை ஜனாதிபதியின் தனிப்பட்ட அலுவலகத்தின் (முதலீடு) தலைவர் மஹ்மூத் ஜசீம் அப்துல்லா அல் அலி, AYAT குழுமத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி நசார் அலி யஸ்லாம், HSH Real Estate நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சயீத் அல் ஹினாய், Green River LLC நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி இமாத் அபேத் அல் ஹாதி, துபாயில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் அலெக்ஸி குணசேகர, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மற்றுமொரு போராட்டத்திற்கும் அதிஷ்டான பூஜைக்கும் தயாராகும் தேரர்கள்
செய்திகள்

மற்றுமொரு போராட்டத்திற்கும் அதிஷ்டான பூஜைக்கும் தயாராகும் தேரர்கள்

November 9, 2026
மாயத்தோற்றம் தரும் போதைப்பொருளால் மூளையில் அதிசய மாற்றம்; மனநல சிகிச்சையில் புதிய நம்பிக்கை!
செய்திகள்

மாயத்தோற்றம் தரும் போதைப்பொருளால் மூளையில் அதிசய மாற்றம்; மனநல சிகிச்சையில் புதிய நம்பிக்கை!

November 9, 2026
சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கும் விஜய் சேதுபதி!
செய்திகள்

சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கும் விஜய் சேதுபதி!

November 9, 2026
சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் காலம் 48 மணித்தியாலங்களாகக் குறைப்பு!
செய்திகள்

சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் காலம் 48 மணித்தியாலங்களாகக் குறைப்பு!

November 9, 2026
40 இலட்சம் பேர் இன்னும் டின் இலக்கம் பெறவில்லை
செய்திகள்

40 இலட்சம் பேர் இன்னும் டின் இலக்கம் பெறவில்லை

November 9, 2026
சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் தொடர்பு; மனைவிக்குத் துரோகம் செய்ததை ஒப்புக்கொண்ட என்விடியா தலைவர்!
உலக செய்திகள்

சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் தொடர்பு; மனைவிக்குத் துரோகம் செய்ததை ஒப்புக்கொண்ட என்விடியா தலைவர்!

November 9, 2026
Next Post
அதிவேக நெடுஞ்சாலை நுழைவுச்சீட்டு வருமானத்தில் 4,614 மில்லியன் ரூபாய் இழப்பு!

அதிவேக நெடுஞ்சாலை நுழைவுச்சீட்டு வருமானத்தில் 4,614 மில்லியன் ரூபாய் இழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு