இலங்கை மத்திய வங்கி எதிர்வரும் 30ஆம் திகதி தனது அடுத்த நாணயக் கொள்கைத் தீர்மானத்தை அறிவிக்கவுள்ளது.
இதன்போது, தற்போதுள்ள 8.75 சதவீத கொள்கை வட்டி வீதத்தில் மாற்றம் செய்யப்படாமல் தொடர்வதற்கான வாய்ப்பு அதிகம் என ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் நிதி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வட்டி வீதம் 8.75 சதவீதமாகவே தொடர 60 சதவீத வாய்ப்பும், 50 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரித்து 9.25 சதவீதமாக மாற்ற 40 சதவீத வாய்ப்பும் உள்ளதாக அந்த நிறுவனம் கணித்துள்ளது.
எனினும், மத்திய வங்கியின் 5 சதவீத பணவீக்க இலக்கை விட ஆகஸ்ட் மாத பணவீக்கம் 8 சதவீதமாக உயர்ந்துள்ளமை வட்டி வீத முடிவில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
அதேவேளை, வங்கிகளின் அதிகப்படியான பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் புதிய ஒதுக்கீட்டுத் தேவைகள் நடைமுறைக்கு வருவதால், உடனடியாக வட்டி வீதத்தை உயர்த்த வேண்டிய அவசியம் குறையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








