Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு!

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு!

13 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபை இன்று (11) வெளியிட்டுள்ளது.

பிரதேச செயலக மட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, விண்ணப்பதாரர்கள் மற்றும் பொதுமக்கள் இணையவழியில் தமது மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கு மேலதிக கால அவகாசம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்டத்திற்குத் தகுதியான பயனாளர்களின் பெயர்ப் பட்டியல் கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதியாக இன்று (11) அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 11ஆம் திகதி வரை இணையவழி கட்டமைப்பில் 143,805 மேன்முறையீடுகளும், பொதுமக்களிடமிருந்து 6,478 ஆட்சேபனைகளும் பதிவாகியுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

2002ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 11ஆவது பிரிவுக்கு அமைவாக, மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான நடைமுறை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கமைய, தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மற்றும் பொதுமக்கள் தமது மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை கீழ்வரும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகச் சமர்ப்பிக்க முடியும்.

https://eservices.wbb.gov.lk

இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் தொழில்நுட்ப உதவி தேவைப்படுவோர் தத்தமது பிரதேச செயலகங்களில் அமைந்துள்ள நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவை அணுக முடியும்.

மேலதிக தகவல்கள் மற்றும் உதவிகளுக்கு 1924 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் நலன்புரி நன்மைகள் சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வருடாந்தம் 10,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் – இணையவழி ஆபத்துகளும் அதிகரிப்பு!
செய்திகள்

வருடாந்தம் 10,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் – இணையவழி ஆபத்துகளும் அதிகரிப்பு!

November 11, 2026
யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்!
செய்திகள்

யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்!

November 11, 2026
BIMSTEC சுகாதார அமைச்சர்கள் மாநாட்டின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு!
செய்திகள்

BIMSTEC சுகாதார அமைச்சர்கள் மாநாட்டின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு!

November 11, 2026
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு; இறுதி ஆவணத்தைப் பார்வையிட்டார் ஜனாதிபதி!
செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு; இறுதி ஆவணத்தைப் பார்வையிட்டார் ஜனாதிபதி!

November 11, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத பலாங்கொட கஸ்ஸப தேரரை கைது செய்ய பிடியாணை!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத பலாங்கொட கஸ்ஸப தேரரை கைது செய்ய பிடியாணை!

November 11, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.70 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.70 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது!

November 11, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு