Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வருடாந்தம் 10,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் – இணையவழி ஆபத்துகளும் அதிகரிப்பு!

வருடாந்தம் 10,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் – இணையவழி ஆபத்துகளும் அதிகரிப்பு!

14 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் வருடாந்தம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக சுமார் 10,000 முறைப்பாடுகள் கிடைப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் ஷானிகா மலல்கொட தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில், சிறுவர்கள் தொடர்பான ஊடக அறிக்கையிடலுக்கான தேசிய வழிகாட்டல் கோவையொன்றை அறிமுகப்படுத்த அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், கொடூரமான நடத்தைகள், இணையவழி அச்சுறுத்தல்கள், இளம் வயதுக் கர்ப்பம் மற்றும் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சிறுவர்கள் முகங்கொடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த வழிகாட்டல் கோவை தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இணையவழியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் (SLCERT) சிரேஷ்ட தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 53 உணர்திறன்மிக்க டிஜிட்டல் ஊடகச் சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் அந்த எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, சமூக ஊடகங்களில் வருமானம் ஈட்டும் நோக்கில் சிறுவர்கள் தொடர்பான உள்ளடக்கங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும், பெற்றோர் மற்றும் சமூகத்தினரின் போதிய விழிப்புணர்வின்மை காரணமாக சிறுவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு!
செய்திகள்

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு!

November 11, 2026
யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்!
செய்திகள்

யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்!

November 11, 2026
BIMSTEC சுகாதார அமைச்சர்கள் மாநாட்டின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு!
செய்திகள்

BIMSTEC சுகாதார அமைச்சர்கள் மாநாட்டின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு!

November 11, 2026
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு; இறுதி ஆவணத்தைப் பார்வையிட்டார் ஜனாதிபதி!
செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு; இறுதி ஆவணத்தைப் பார்வையிட்டார் ஜனாதிபதி!

November 11, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத பலாங்கொட கஸ்ஸப தேரரை கைது செய்ய பிடியாணை!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத பலாங்கொட கஸ்ஸப தேரரை கைது செய்ய பிடியாணை!

November 11, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.70 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.70 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது!

November 11, 2026
Next Post
அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு!

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு