50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கத்திற்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முறையான திட்டமிடல் இன்றி அறிமுகப்படுத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தரக் கல்விச் சீர்திருத்தங்கள் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இச்சீர்திருத்தங்களுக்குப் பொறுப்பான தேசிய கல்வி நிறுவன அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படாமல் முழுச் சம்பளத்துடன் வீட்டில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.








