ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் முற்றாக மறுத்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றின் மூலம், இச்செய்திகள் பொய்யானவை என்று ஜனாதிபதி அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளதுடன், இத்தகைய வதந்திகளைக் கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை, உண்மைத்தன்மையைச் சரிபார்க்காமல் சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறும் ஜனாதிபதி அலுவலகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.








