குவைத்தில் இரு வெவ்வேறு பகுதிகளில் இலங்கைப் பெண்கள் இருவர் சந்தேகத்துக்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமான ‘அரப் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
அலி சபா அல்-சலேம் பகுதியில் உள்ள வீடொன்றின் மேல் மாடிக் களஞ்சிய அறையில் 1988ஆம் ஆண்டு பிறந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மற்றொரு சம்பவத்தில், அல்-நஹ்தா பகுதியில் 1999ஆம் ஆண்டு பிறந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இரு பெண்களின் சடலங்களும் மருத்துவத் தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன், மரணங்களுக்கான காரணங்களைக் கண்டறிய குவைத் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், இரு மரணங்களுக்குமான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.







