2018ஆம் ஆண்டு புத்தளம் வண்ணாத்துவில்லு, லக்டோவத்த பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களைச் சேகரித்த குற்றச்சாட்டில், நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு தலா 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன் இணைந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைச் சேகரித்த குற்றச்சாட்டை இருவரும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.








