தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட நீர்மட்ட அதிகரிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வடக்கு ரயில் மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, குருநாகல் மற்றும் மஹவைக்கு இடையிலான ரயில் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, கொழும்பிலிருந்து வடக்கு நோக்கிப் பயணிக்கும் தொடருந்துகள் குருநாகல் வரை மாத்திரமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் தொடருந்துகள் மஹவ சந்தி வரை மாத்திரமே சேவையில் ஈடுபடும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று (02) பெய்த கடும் மழையைத் தொடர்ந்து தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அதன் நான்கு மதகுகளும் தலா ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால் வடக்கு ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் பயணிகள் தங்களது பயணங்களைத் திட்டமிடும்போது மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.








