Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தீபாவளியை முன்னிட்டு ஒளிர்ந்தது மட்டக்களப்பு கல்லடி பாலம்; கண்கவர் மின் அலங்காரங்கள் திறந்து வைப்பு!

தீபாவளியை முன்னிட்டு ஒளிர்ந்தது மட்டக்களப்பு கல்லடி பாலம்; கண்கவர் மின் அலங்காரங்கள் திறந்து வைப்பு!

1 hour ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

தீபாவளிப் பண்டிகையை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தி ஒளியூட்டும் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, மட்டக்களப்பின் புகழ்பெற்ற கல்லடி புதிய பாலத்தில் அமைக்கப்பட்ட கண்கவர் அலங்கார மின் வளைவுகள் ஒளியூட்டி திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று மாலை (05) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்நாடு சென்னை மாவட்ட முன்னாள் ஆளுநர் என்.எஸ். சரவணன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அலங்கார மின் வளைவுகளை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை முன்னிட்டு, மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டம் நகரின் அழகை மேலும் மெருகூட்டும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத், மாநகரசபையின் பிரதி முதல்வர் வை. தினேஸ்குமார், ஆணையாளர் தனஞ்செயன், மாநகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

அத்துடன், ரோட்டரிக் கழகத்தின் தன்வந்திரி செயற்திட்ட பிரதானி டி.ஆர். தனசேகர், சிறப்பு முன்னெடுப்புக்களுக்கான பிரதானி எஸ். சாய்சேக்ஷன் மற்றும் ரோட்டரி வலயம் 5 தெற்காசிய உறுப்பினர் ஒருங்கிணைப்பாளர் ஜெகவண்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதன்போது கல்லடி புதிய பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார மின் வளைவுகள் ஒளியூட்டப்பட்டதைத் தொடர்ந்து, வண்ணமயமான ஒளி அலங்காரத்தில் பாலம் ஜொலித்தது.

இந்த அழகிய காட்சியைக் காண்பதற்காகப் பெருமளவான பொதுமக்கள் ஒன்றுகூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; CPC அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; CPC அறிவிப்பு!

November 6, 2026
சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசல் உண்டியலில் பணம் திருட்டு; சிசிடிவியில் காட்சிகள் பதிவு!
காணொளிகள்

சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசல் உண்டியலில் பணம் திருட்டு; சிசிடிவியில் காட்சிகள் பதிவு!

November 6, 2026
மட்டு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விசேட கள விஜயம்!
செய்திகள்

மட்டு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விசேட கள விஜயம்!

November 6, 2026
காத்தான்குடி பாலமுனை பகுதியில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சுருக்கு வலைகளுடன் இருவர் கைது-வாகனம் ஒன்றும் மீட்பு
செய்திகள்

காத்தான்குடி பாலமுனை பகுதியில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சுருக்கு வலைகளுடன் இருவர் கைது-வாகனம் ஒன்றும் மீட்பு

November 6, 2026
ஆரையம்பதியில் பெண்ணுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைப்பு; பெண் உயிரிழப்பு – சந்தேகநபர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் பெண்ணுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைப்பு; பெண் உயிரிழப்பு – சந்தேகநபர் கைது!

November 6, 2026
அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டது; கனடாவிலிருந்து வெளியேற்றப்படவுள்ள ஈழத் தமிழ் இளைஞர்
உலக செய்திகள்

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டது; கனடாவிலிருந்து வெளியேற்றப்படவுள்ள ஈழத் தமிழ் இளைஞர்

November 6, 2026
Next Post
காத்தான்குடி பாலமுனை பகுதியில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சுருக்கு வலைகளுடன் இருவர் கைது-வாகனம் ஒன்றும் மீட்பு

காத்தான்குடி பாலமுனை பகுதியில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சுருக்கு வலைகளுடன் இருவர் கைது-வாகனம் ஒன்றும் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு