Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடி பாலமுனை பகுதியில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சுருக்கு வலைகளுடன் இருவர் கைது-வாகனம் ஒன்றும் மீட்பு

காத்தான்குடி பாலமுனை பகுதியில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சுருக்கு வலைகளுடன் இருவர் கைது-வாகனம் ஒன்றும் மீட்பு

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காத்தான்குடி பாலமுனை பகுதியில் வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்ற 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சட்டவிரோத சுருக்கு வலைகளுடன் 2 பேரை நேற்று வியாழக்கிழமை (05) அதிகாலையில் கைது செய்து காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

மட்டு ஊழல் மோசடி மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான அமைப்பினர் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு வழங்கிய தகவலையடுத்து மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் வழிகாட்டலில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவ தினமான இன்று அதிகாலை 4.00 மணிக்கு பாலமுனை கடற்கரைக்கு செல்லும் பகுதி வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இதன் போது கடற்கரையை நோக்கி பிரயாணித்த மூடிய சிறிய ரக வாகனம் ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் நிறுத்தி சோதனையிட்ட போது அதில் சட்டவிரோத சுருக்கு வலைகளை கொண்டு செல்வதை கண்டுபிடித்ததை அடுத்து அந்த வாகனத்தின் சாரதி உட்பட இருவரை கைது செய்ததுடன் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சுருக்கு வலைகளையும் மூடிய சிறிய ரக வாகனத்தையும் மீட்டு காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத சுருக்கு வலை பாவித்து மீன் பிடியில் ஈடுபடுவதை கண்டித்து கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் முன்னாள் மீனவ சங்கங்கள் மீனவர்கள் ஒன்றினைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அந்த திணைக்கள பணிப்பாளரிடம் மகஜர் கையளித்த போதும் அந்த திணைக்கள அதிகாரிகள் இந்த சட்டவிரோத சுருக்கு வலை பாவித்து மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பாக எது விதமான நடவடிக்கையும் எடுக்காமல் அசமந்தப் போக்கில் செயற்படுவதாக மீனவர்கள் கடும் விசனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; CPC அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; CPC அறிவிப்பு!

November 6, 2026
சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசல் உண்டியலில் பணம் திருட்டு; சிசிடிவியில் காட்சிகள் பதிவு!
காணொளிகள்

சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசல் உண்டியலில் பணம் திருட்டு; சிசிடிவியில் காட்சிகள் பதிவு!

November 6, 2026
மட்டு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விசேட கள விஜயம்!
செய்திகள்

மட்டு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விசேட கள விஜயம்!

November 6, 2026
தீபாவளியை முன்னிட்டு ஒளிர்ந்தது மட்டக்களப்பு கல்லடி பாலம்; கண்கவர் மின் அலங்காரங்கள் திறந்து வைப்பு!
செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு ஒளிர்ந்தது மட்டக்களப்பு கல்லடி பாலம்; கண்கவர் மின் அலங்காரங்கள் திறந்து வைப்பு!

November 6, 2026
ஆரையம்பதியில் பெண்ணுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைப்பு; பெண் உயிரிழப்பு – சந்தேகநபர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் பெண்ணுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைப்பு; பெண் உயிரிழப்பு – சந்தேகநபர் கைது!

November 6, 2026
அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டது; கனடாவிலிருந்து வெளியேற்றப்படவுள்ள ஈழத் தமிழ் இளைஞர்
உலக செய்திகள்

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டது; கனடாவிலிருந்து வெளியேற்றப்படவுள்ள ஈழத் தமிழ் இளைஞர்

November 6, 2026
Next Post
மட்டு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விசேட கள விஜயம்!

மட்டு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விசேட கள விஜயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு