மட்டக்களப்பு குளாம்பியாமடு வீதியில் இன்று காலை வேன் ஒன்றும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்றும், ஏறாவூர் நோக்கிச் சென்ற வேன் ஒன்றும் குழம்பியமடு வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காரில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் பயணித்துள்ளதுடன், வேனில் ஆறு பேர் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்தில் வேனில் பயணித்த சிலர் காயமடைந்துள்ளனர்.
மழை பெய்தமையால் வீதி வழுக்கும் தன்மையை அடைந்த நிலையில், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.












