அஸ்வெசும பயனாளிகளின் முழுமையான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
எனவே பட்டியலில் ஏதேனும் சிக்கல் இருந்தால், மேல்முறையீடுகள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், காலம் முடிந்த பிறகு எந்த கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படாது என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவரும், ஆணையாளருமான நிமல் கொட்டவெலகெதர தெரிவித்துள்ளார்.
தற்போது பட்டியல் பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலர் மட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,இணையதளத்திலும் இதனை பார்வையிடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பணம் வழங்கும் குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும்,ஒன்பது இலட்சம் பேர் அடங்கிய பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே விண்ணப்பித்தவர்கள் ஏழைப் பிரிவு, மிகவும் ஏழைப் பிரிவு, நலிவடைந்தோர் பிரிவு, இடைநிலைப் பிரிவு அல்லது அடையாளம் தெரியாதோர் பட்டியலில் உள்ளீர்களா என்பதை சரி பார்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.








