Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்!

ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்!

30 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு கல்லடி, காத்தான்குடி மற்றும் வவுணதீவு ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறியே இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த சம்பவங்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட ஐவர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தக் கொலைகள் தொடர்பாக பிள்ளையான் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வழக்கு தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான மொஹமட் சிபான், மொஹமட் சகீத் ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று (10) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேகநபர்களான மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டதுடன், பிள்ளையான் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்ற விசாரணையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, வழக்கின் மேலதிக விசாரணைகளைக் கருத்திற்கொண்டு பிள்ளையான் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தேசிய நீர்வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!
செய்திகள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தேசிய நீர்வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

November 10, 2026
பெந்தோட்டை கடலில் நீராடிய ரஷ்ய பிரஜை அலையில் சிக்கி உயிரிழப்பு!
செய்திகள்

பெந்தோட்டை கடலில் நீராடிய ரஷ்ய பிரஜை அலையில் சிக்கி உயிரிழப்பு!

November 10, 2026
போர் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் காசாவில் 250 ஜோடிகளுக்கு பிரமாண்ட கூட்டுத் திருமணம்!
உலக செய்திகள்

போர் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் காசாவில் 250 ஜோடிகளுக்கு பிரமாண்ட கூட்டுத் திருமணம்!

November 10, 2026
அநுராதபுரத்தில் கோர விபத்து; மூன்று பேருந்துகள் மோதி இருவர் பலி – 50இற்கும் மேற்பட்டோர் காயம்!
செய்திகள்

அநுராதபுரத்தில் கோர விபத்து; மூன்று பேருந்துகள் மோதி இருவர் பலி – 50இற்கும் மேற்பட்டோர் காயம்!

November 10, 2026
மாகாண சபைத் தேர்தலை மிக விரைவாக நடத்துங்கள்; இலங்கை அரசிடம் இந்தியத் தூதுவர் வலியுறுத்தல்!
செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை மிக விரைவாக நடத்துங்கள்; இலங்கை அரசிடம் இந்தியத் தூதுவர் வலியுறுத்தல்!

November 10, 2026
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல்?; அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக தாய் குற்றச்சாட்டு!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல்?; அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக தாய் குற்றச்சாட்டு!

November 10, 2026
Next Post
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தேசிய நீர்வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தேசிய நீர்வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு