2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் மீதான விசேட வர்த்தகப் பண்ட வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்கவினால் இந்த வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் நெத்தலி மீதான விசேட வர்த்தகப் பண்ட வரி ஒரு கிலோகிராமுக்கு 100 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாசி (கருவாடு) மீதான வரி 302 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகவும், அரைத்த மற்றும் அரைக்காத உலர்ந்த மிளகாய் மீதான வரி ஒரு கிலோகிராமுக்கு 50 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.
குறித்த வரி திருத்தங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், இதன் மூலம் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்து, நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.







