ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் புஜைரா நகரில் இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் இந்தியர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஷேக் கலீபா பின் சைத் பகுதியில் நேற்று (12) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி, போக்குவரத்து நெரிசல் காரணமாக மெதுவாகச் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது சுமார் 23 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தைத் தொடர்ந்து லொறியில் தீப்பற்றியதுடன், தீ ஏனைய வாகனங்களுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புஜைரா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







