கட்டாய SLS 591 தரச்சான்றிதழ் முத்திரையின்றி டின் மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் உற்பத்தி செய்தமை தொடர்பில், பல்பொருள் அங்காடி உரிமையாளர் உள்ளிட்ட ஐவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் மொத்தமாக 110,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்ட சோதனையின்போது, தரச்சான்றிதழ் முத்திரையற்ற 185 கிராம் எடையுடைய 87 டின் மீன்கள் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, பல்பொருள் அங்காடி தரப்பினருக்கு 90,000 ரூபாவும், உற்பத்தி நிறுவனத்தின் தரப்பினருக்கு 20,000 ரூபாவும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.







