Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகின் முன்னணி 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் இடம்பிடித்த கொழும்பு துறைமுகம்!

உலகின் முன்னணி 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் இடம்பிடித்த கொழும்பு துறைமுகம்!

14 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சர்வதேச ‘அல்பாலைனர்’ (Alphaliner) நிறுவனத்தின் தரவரிசைப்படி, உலகின் மிகவும் பரபரப்பான கொள்கலன் துறைமுகங்களில் கொழும்பு துறைமுகம் 20 ஆவது இடத்திற்கு முன்னேறி புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபை வெளியிட்டுள்ள தகவலின்படி, நடப்பு ஆண்டின் முதல் பத்து மாதங்களில் கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 5,825,909 கொள்கலன்கள் கையாளப்பட்ட நிலையில், இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 6,406,363 ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 580,454 மேலதிக கொள்கலன்கள் கையாளப்பட்டுள்ளதுடன், கணிசமான வளர்ச்சியும் பதிவாகியுள்ளது.

குறிப்பாக, ஒக்டோபர் மாதத்தில் கொள்கலன் கையாளும் நடவடிக்கைகள் 9.6 சதவீதத்தால் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 620,830 கொள்கலன்கள் கையாளப்பட்ட நிலையில், இவ்வாண்டு அதே மாதத்தில் 680,125 கொள்கலன்கள் கையாளப்பட்டுள்ளன.

இதன்படி, கடந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை 59,295 மேலதிக கொள்கலன்கள் கையாளப்பட்டுள்ளன.

இதேவேளை, மீள்ஏற்றுமதி (Transshipment) கொள்கலன் நடவடிக்கைகளிலும் இவ்வாண்டின் முதல் பத்து மாதங்களில் 10 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சர்வதேச கப்பல் போக்குவரத்துத் துறையின் முன்னணி தரப்படுத்தல் நிறுவனமான அல்பாலைனரின் தரவரிசையில், கடந்த ஆண்டு இறுதியில் 26 ஆவது இடத்தில் இருந்த கொழும்பு துறைமுகம், தற்போது 20 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த முன்னேற்றம் சர்வதேச கப்பல் போக்குவரத்துத் துறையில் கொழும்பு துறைமுகத்தின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்து வருவதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மனித வரலாற்றில் புதிய மைல்கல்: பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவைக் கடந்த வாயேஜர்-1!
செய்திகள்

மனித வரலாற்றில் புதிய மைல்கல்: பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவைக் கடந்த வாயேஜர்-1!

November 19, 2026
கல்முனையில் மற்றுமொருவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைது
செய்திகள்

கல்முனையில் மற்றுமொருவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைது

November 19, 2026
கடுவலையில் பயங்கர தீ விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!
செய்திகள்

கடுவலையில் பயங்கர தீ விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!

November 19, 2026
ட்ரம்ப், ஜி ஜின்பிங், புடின் ஒரே மேடையில்; நாளை வரலாற்றுச் சந்திப்பு!
உலக செய்திகள்

ட்ரம்ப், ஜி ஜின்பிங், புடின் ஒரே மேடையில்; நாளை வரலாற்றுச் சந்திப்பு!

November 18, 2026
வேலைநிறுத்தத்தால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சேவைகள் பாதிப்பு!
செய்திகள்

வேலைநிறுத்தத்தால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சேவைகள் பாதிப்பு!

November 18, 2026
மட்டு காந்தி பூங்கா முன்பாக கடும் தள்ளுமுள்ளு!-மூவர் கைது
காணொளிகள்

மட்டு காந்தி பூங்கா முன்பாக கடும் தள்ளுமுள்ளு!-மூவர் கைது

November 18, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு