Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் ஊடாகப் பதிவு செய்யப்பட்ட 90க்கும் மேற்பட்ட தனிநபர் வியாபாரப் பதிவு ஆவணங்கள் இணையத்தில் கசிவு!

யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் ஊடாகப் பதிவு செய்யப்பட்ட 90க்கும் மேற்பட்ட தனிநபர் வியாபாரப் பதிவு ஆவணங்கள் இணையத்தில் கசிவு!

15 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தனிநபர் வியாபாரப் பதிவுகளுடன் தொடர்புடைய 90 இற்கும் மேற்பட்ட ஆவணங்கள், சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி இணையத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஆவணங்கள் கூகுள் இணையதளத்தில் பொதுமக்கள் அணுகக்கூடிய வகையில் பதிவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதேச செயலகத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இதன்போது, யாழ்ப்பாணம் கச்சேரியில் நடைபெற்ற விளக்கக்காட்சி ஒன்றுடன் தொடர்புடைய சந்தர்ப்பத்தில் சுமார் 90 இற்கும் மேற்பட்ட ஆவணங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தனிநபர்களின் வியாபாரப் பதிவு ஆவணங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தகவல்கள் உரிமையாளர்களின் அனுமதியின்றி பொதுவெளியில் கிடைக்கப்பெற்றுள்ளமை தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு தொடர்பில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இணையத்தில் வெளியாகியுள்ள சில ஆவணங்களில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் உத்தியோகபூர்வ முத்திரை இடம்பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பிரதேச செயலகத்திற்கும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், ஆவணங்களை இணையத்திலிருந்து நீக்கி நிலைமையைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த விவகாரம் தொடர்பில் மேலதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட பின்னரும் உடனடி நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

எனவே, யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் ஊடாக வியாபாரப் பதிவுகளை மேற்கொண்டுள்ளவர்கள் தங்களுடைய பதிவு ஆவணங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் பொதுமக்கள் அணுகக்கூடிய வகையில் வெளியாகியுள்ளனவா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

காத்தான்குடி உட்பட 12 பொலிஸ் நிலையங்கள் புனரமைப்பு; பொலிஸ் மா அதிபர் திறந்து வைப்பு!
செய்திகள்

காத்தான்குடி உட்பட 12 பொலிஸ் நிலையங்கள் புனரமைப்பு; பொலிஸ் மா அதிபர் திறந்து வைப்பு!

November 22, 2026
மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்
செய்திகள்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

November 22, 2026
தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளை அரசு மீறியுள்ளது; நாடாளுமன்றத்தைக் கலைக்க முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை!
அரசியல்

தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளை அரசு மீறியுள்ளது; நாடாளுமன்றத்தைக் கலைக்க முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை!

November 22, 2026
ருமேனியாவில் மண் மேடு சரிந்து விபத்து: இலங்கையர் ஒருவர் பலி; மற்றொருவர் உயிருடன் மீட்பு!
உலக செய்திகள்

ருமேனியாவில் மண் மேடு சரிந்து விபத்து: இலங்கையர் ஒருவர் பலி; மற்றொருவர் உயிருடன் மீட்பு!

November 22, 2026
அரசடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு சென்ற மாணவியை 26 நாட்களாக காணவில்லை!
காணொளிகள்

அரசடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு சென்ற மாணவியை 26 நாட்களாக காணவில்லை!

November 22, 2026
மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் சிரமதானம்!
செய்திகள்

மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் சிரமதானம்!

November 22, 2026
Next Post
காத்தான்குடி உட்பட 12 பொலிஸ் நிலையங்கள் புனரமைப்பு; பொலிஸ் மா அதிபர் திறந்து வைப்பு!

காத்தான்குடி உட்பட 12 பொலிஸ் நிலையங்கள் புனரமைப்பு; பொலிஸ் மா அதிபர் திறந்து வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு