Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளை அரசு மீறியுள்ளது; நாடாளுமன்றத்தைக் கலைக்க முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை!

தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளை அரசு மீறியுள்ளது; நாடாளுமன்றத்தைக் கலைக்க முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை!

29 minutes ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மீறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆணை இல்லையெனில் நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (21) வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்பார்த்த நிவாரணங்கள் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், 2024ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சிக்காக என்ன செய்துள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், அந்நியச் செலாவணி கையிருப்பு, எரிபொருள் விலைகள், டொலரின் பெறுமதி மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதாரக் குறிகாட்டிகளைச் சுட்டிக்காட்டிய அவர், 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என விமர்சித்தார்.

அத்துடன், அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவிலிருந்து சுமார் 10 இலட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு அரசாங்கம் உரிய நிவாரணங்களை வழங்கத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆறு மாதங்களுக்குள் நாட்டைக் கட்டியெழுப்புவதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம், தற்போது ஈரான் போர் உள்ளிட்ட காரணங்களைக் கூறி கால அவகாசம் கோருவதாகவும் அவர் சாடினார்.

எனவே, தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ள அரசாங்கம் தனது தற்போதைய கொள்கைகளுக்காக மீண்டும் மக்களின் ஆணையைப் பெற வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்தி, புதிய தேர்தல் விஞ்ஞாபனத்துடன் மக்களைச் சந்திக்க வேண்டும் என்றும் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ருமேனியாவில் மண் மேடு சரிந்து விபத்து: இலங்கையர் ஒருவர் பலி; மற்றொருவர் உயிருடன் மீட்பு!
உலக செய்திகள்

ருமேனியாவில் மண் மேடு சரிந்து விபத்து: இலங்கையர் ஒருவர் பலி; மற்றொருவர் உயிருடன் மீட்பு!

November 22, 2026
அரசடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு சென்ற மாணவியை 26 நாட்களாக காணவில்லை!
காணொளிகள்

அரசடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு சென்ற மாணவியை 26 நாட்களாக காணவில்லை!

November 22, 2026
மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் சிரமதானம்!
செய்திகள்

மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் சிரமதானம்!

November 22, 2026
மயிலவட்டவானில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் மடக்கிப் பிடிப்பு!
செய்திகள்

மயிலவட்டவானில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் மடக்கிப் பிடிப்பு!

November 22, 2026
உடன் அமுலுக்கு வரும் வகையில் 6 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம்
செய்திகள்

உடன் அமுலுக்கு வரும் வகையில் 6 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம்

November 22, 2026
பேத்தாழை பாரதியார் முன்பள்ளி சிறார்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிய பாலீஸ்வரர் ஆலயம்!
செய்திகள்

பேத்தாழை பாரதியார் முன்பள்ளி சிறார்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிய பாலீஸ்வரர் ஆலயம்!

November 21, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு