2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகளைச் சமர்ப்பிப்பதற்கு எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்களுக்குரிய வருமான வரி அறிக்கைகளை 2026 நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவன வருமான வரி (CIT), கூட்டாண்மை வருமான வரி (PIT) மற்றும் தனிநபர் வருமான வரி (IIT) ஆகியவற்றுக்கான அறிக்கைகளே இவ்வாறு சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளன.
எனவே, வரி செலுத்துவோர் இறுதித் திகதி வரை காத்திருக்காமல் உரிய காலத்திற்குள் தமது வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறும், தாமதத்தால் ஏற்படக்கூடிய அபராதங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.







