மாத்தறை மாவட்டம், வெலிகம – மிதிகம பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த நான்கு உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.
மிதிகம பகுதியிலுள்ள புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஜீப் ரக வாகனம், காலியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த நான்கு STF உத்தியோகத்தர்களும் உடனடியாக மீட்கப்பட்டு மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








