திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று (22) இரவு பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த மூவரும் விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரும், காயமடைந்த நபரும் தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் காயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







