Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செத்தல் மிளகாய் விலை ரூ.2,500 ஆக அதிகரிக்கலாம்; இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை!

செத்தல் மிளகாய் விலை ரூ.2,500 ஆக அதிகரிக்கலாம்; இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை!

9 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டின் சந்தைகளில் செத்தல் மிளகாயின் விலை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரித்து கிலோகிராம் ஒன்றுக்கு 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள செத்தல் மிளகாய் அடங்கிய கொள்கலன்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சந்தையில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அந்தச் சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தற்போது சுமார் 120 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட செத்தல் மிளகாய் சுங்கக் களஞ்சியசாலைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இறக்குமதிகளுக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, சுங்கக் கட்டணங்கள் உள்ளிட்ட உரிய கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதுடன், பரிசோதனை நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளன. எனினும், தரம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முன்னர் 1,050 ரூபாவாகக் காணப்பட்ட செத்தல் மிளகாய் கிலோகிராம் ஒன்றின் விலை தற்போது சுமார் 2,000 ரூபா வரை உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு தொடர்ந்தால் எதிர்வரும் நாட்களில் 2,500 ரூபாவையும் தாண்டும் நிலை ஏற்படலாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இதன் தாக்கம் செத்தல் மிளகாயைப் பயன்படுத்தி மிளகாய்த்தூள் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் எதிரொலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாகப் பல தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சுங்கக் களஞ்சியசாலைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள செத்தல் மிளகாய் கொள்கலன்களை விடுவிப்பதற்கு விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

43 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் இரு மதுவரித் திணைக்கள அதிகாரிகள் உட்பட மூவர் கைது!
செய்திகள்

43 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் இரு மதுவரித் திணைக்கள அதிகாரிகள் உட்பட மூவர் கைது!

November 23, 2026
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக இன்று தேசிய எதிர்ப்பு நாள்; பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில்!
செய்திகள்

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக இன்று தேசிய எதிர்ப்பு நாள்; பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில்!

November 23, 2026
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!

November 23, 2026
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வாகனம் செலுத்த அனுமதித்தால் பெற்றோருக்கும் சிறை!
செய்திகள்

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வாகனம் செலுத்த அனுமதித்தால் பெற்றோருக்கும் சிறை!

November 22, 2026
உலகில் அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட நாடுகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம்!
செய்திகள்

உலகில் அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட நாடுகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம்!

November 22, 2026
பணிப்புறக்கணிப்புக்கு மக்களின் ஆதரவு கிடையாது; ஊழல்வாத அரசியல்வாதிகளுடன் இணைந்து சில தொழிற்சங்கங்கள் நாட்டைச் சீரழிக்க முயற்சி – எம்.பி. கந்தசாமி பிரபு
அரசியல்

பணிப்புறக்கணிப்புக்கு மக்களின் ஆதரவு கிடையாது; ஊழல்வாத அரசியல்வாதிகளுடன் இணைந்து சில தொழிற்சங்கங்கள் நாட்டைச் சீரழிக்க முயற்சி – எம்.பி. கந்தசாமி பிரபு

November 22, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு