பராமரிப்புப் பணிகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி இன்று (24) காலை மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6.00 மணி முதல் குறித்த வீதியில் வழமைபோன்று வாகனப் போக்குவரத்து முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழ் கடுகன்னாவ பகுதியில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட பாறைகளைப் பாதுகாப்பாக அகற்றுதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக நேற்று (23) குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
இந்நடவடிக்கை தொடர்பான தகவலை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.







