பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, இன்று (25) நடைபெறவிருந்த பல்கலைக்கழகப் பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் நடைபெறவிருந்த அனைத்து விரிவுரைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒரு வாரத்திற்குள் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் இரண்டாவது வேலைநிறுத்தப் போராட்டம் இதுவாகும்.
2025 ஆம் ஆண்டு பாதீட்டில் குறைக்கப்பட்ட வேதனம் , மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை தற்போதைய பாதீட்டில் மீண்டும் வழங்குமாறு கோரி இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.







